
மதுரை மீனாட்சி அம்மனை பற்றிய பழைய பாடல் ஒன்றில், 'வனஜா, சியாமளா, சுதந்தரி, சங்கரி கருணாகரி, சுபமங்களா, மனோகரி, கடம்பவன மகாராணி, ராஜேஸ்வரி, சிந்தாமணி, மனோன்மணி, பரமேஸ்வரி என அம்மனின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதில் உள்ள மனோன்மணி எங்கு அருள்புரிகிறாள் தெரியுமா...
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சொக்கநாதர் சன்னதியில் இருக்கிறாள். சிறிய சிலை வடிவில் உள்ள இவளை 'படிதாண்டா பத்தினி' என்கின்றனர். கருவறையின் வாசலை விட்டு இவள் வெளியே வருவதில்லை. திருவிழாவின் போது சொக்கநாதருடன், பிரியாவிடை ஒரே வாகனத்தில் வலம் வருவாள். மீனாட்சியம்மன் தனி வாகனத்தில் வருவாள். ஆனால் மனோன்மணித் தாயோ கருவறையில் மட்டுமே இருப்பாள். தம்பதியர் வாழ்வு சிறக்க இவளிடம் பிரார்த்தனை செய்தால் போதும்.
இனியாவது மதுரையில் மனோன்மணியையும் தரிசிக்க தவறாதீர்கள்.
-லட்சுமி பாலசுப்ரமணியன்