
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'வி' என்றால் 'மேலான' என்றும், 'வெற்றி' என்றும் பொருள் உண்டு. 'நாயகர்' என்றால் 'தலைவர்'. விநாயகர் என்பதற்கு மேலான தலைவர் என பொருள்.
சிவனும், பார்வதியும் கூட முதல் தெய்வமான இவரை வழிபட்ட பிறகே, கடமைகளைச் செய்ய வேண்டும்.
இதில் வயது வித்தியாசமோ,உறவோ முக்கியம் அல்ல. வழிபாட்டில் ஒழுங்கு வேண்டும் என்பதற்காக விநாயகர் வழிபாடு முதல் வழிபாடு ஆக்கப்பட்டது. இதனால் விநாயகர் நாமாவளியில், 'ஓம் அநீஸ்வராய நமஹ' என்றொரு நாமம் உண்டு.
'அநீஸ்' என்பதற்கு 'நிகரற்றவர்' என பொருள். இவருக்கு மேலான ஒருவர் இல்லை என்பதால், 'அநீஸ்வரர்' எனப் பெயர் பெற்றார்.

