
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதம்' என்பது அவ்வையார் பாடிய விநாயகர் அகவலின் முதல்வரி. 'களபம்' என்பதற்கு 'குட்டி யானை' என்பது பொருள்.
பார்ப்பதற்கு குட்டி யானையாக இருக்கும் விநாயகரை வழிபட்டால், பெரிய செயல்களையும் எளிதாக சாதிக்கும் வல்லமை உண்டாகும் என்பது பொருள். இதற்கு வேறொரு விளக்கமும் சொல்வர். 'சீதக் களபம்' என்பதற்கு 'குளிர்ந்த சந்தனக் கலவை' என பொருள். சிவந்த தாமரை போன்ற பாதங்களில் நறுமணம் கமழ குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சேர்ந்த சந்தன கலவை பூசியவர் என்றும் பொருள் உண்டு.