ADDED : ஆக 21, 2025 01:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவபார்வதியை ஒரே ஒரு முறை சுற்றி மாம்பழம் வென்றவர் விநாயகர். இவர் தன்னைச் சுற்றி வருவோருக்கு தேகபலம், புத்திபலத்தை வழங்குபவராக இருக்கிறார். நெற்றியில் குட்டிக் கொள்ளுதல், தோப்புக்கரணமிடுதல், சிதறுகாய் போடுதல், கொழுக்கட்டை படைத்தல் என இவருக்குரிய வழிபாட்டு முறைகள் பல இருந்தாலும் விசேஷ பிரார்த்தனை 'பிரதட்சிணம்' என்னும் சுற்றி வருவதாகும்.
சாதாரணமாக இவரை மூன்று முறை வலம் வந்தாலும், நினைத்தது நிறைவேற சதுர்த்தி திதியன்று 21, 48, 108 எண்ணிக்கையில் சுற்றுவது சிறப்பு.

