
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேங்காயின் மீதுள்ள கனமாக ஓட்டை உடைத்தால் உள்ளே இனிய பருப்பும், இளநீரும் இருக்கும். அதுபோல மனிதன் அகங்கார எண்ணத்தை விட்டு விநாயகரைச் சரணடைந்தால் வாழ்வு இனிக்கும் என்பதே சிதறுகாய் உடைப்பதன் தத்துவம். இதற்கான புராண காரணம் ஒன்றும் உண்டு.
ஒருமுறை சிவனிடம், “உங்களின் சிரசையே எனக்கு பலியிட வேண்டும்” என கேட்டார் விநாயகர். தன்னைப் போல மூன்று கண்கள் கொண்ட தேங்காயை சிவன் படைத்து, அதை விநாயகருக்கு அர்ப்பணித்தார். இதன் அடிப்படையில் விநாயகர் வழிபாட்டில் சிதறுகாய் இடும் பழக்கம் ஏற்பட்டது.