
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசமரம் மும்மூர்த்தி வடிவம் கொண்டது. அதன் அடியில் பிரம்மா, நடுவில் மகா விஷ்ணு, கிளைகளைக் கொண்ட மேற்பாகத்தில் சிவன் இருக்கிறார்.
“ஆயுர் விருத்தி பகவத் தஸ்யவர்த்தந்தே ஸர்வ ஸம்பத” என்கிறது பத்மபுராணம். அதாவது இதை வழிபட்டால் ஆயுள் அதிகரிக்கும். பணம் பெருகும். திங்கட்கிழமையும், அமாவாசையும் சேர்ந்து வந்தால் அந்த நாளை 'அமா சோமவாரம்' என்பர். அன்று அரசமரத்தை சுற்றினால் பாவம் தீரும். இந்த மரத்தை பகல் நேரத்தில் மட்டும் சுற்றலாம்.
சனிக்கிழமை தவிர மற்ற நாளில் தொடக் கூடாது. இதிலுள்ள சுள்ளியை ஹோமத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த ஹோமப்புகை வீட்டில் பரவினால் நன்மை பெருகும்.