நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நினைத்தது நிறைவேறவும், குடும்ப பிரச்னை தீரவும், நோய் நொடியில் இருந்து விடுபடவும் திருப்பதி ஏழுமலையானுக்கு புரட்டாசி சனியன்று மாவிளக்கு ஏற்றுவதாக நேர்ச்சை செய்வர். இதைச் செய்ய திருப்பதிக்குச் செல்லத் தேவையில்லை. புரட்டாசி சனியன்று வீட்டிலேயே ஏற்றலாம்.
இதற்காக பச்சரிசி மாவு இடித்து அதில் வெல்லம், இளநீர் சேர்த்து பிசைவர். வாழை இலை மீது அகல் விளக்கு போல செய்து நெய்விட்டு விளக்கேற்றுவர். மலர்களால் மாவிளக்கை அலங்கரித்து தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வைத்து வழிபடுவர்.
வெங்கடேச பிரபத்தி, ஸ்தோத்திரம், நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல்களை பாடுவர். இந்த வழிபாட்டின் போது திருப்பதி ஏழுமலையானே நம் வீட்டிற்கு எழுந்தருள்வதாக ஐதீகம்.

