ADDED : அக் 02, 2025 11:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'திருமால் பெருமைக்கு நிகர் ஏது; அவன் திருவடி நிழலுக்கு இணையேது' என்பார்கள்.
திருமாலைப் பாடி உள்ளம் உருகியவர் குலசேகராழ்வார். ஸ்ரீரங்கம், திருப்பதி, திருவித்துவக்கோடு, திருக்கண்ணபுரம், சிதம்பரம் சித்ரக்கூடம் ஆகிய ஐந்து தலங்களில் இவர் பாடிய பாடல்களில் ராம, கிருஷ்ண அவதாரத்தின் பெருமையை விளக்கியுள்ளார்.
திருவித்துவக்கோடு பெருமாள் மீது பாடிய பாடல்கள் மிக உருக்கமானவை. 'தாயின் அன்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் குழந்தை, கணவனையே நம்பி வாழும் பதிவிரதை, மன்னனை எதிர்பார்த்திருக்கும் குடிமக்கள், மருத்துவரை நம்பியிருக்கும் நோயாளி போல 'நானும் உன்னையே நம்பி சரணடைந்தேன் என்னை ஏற்றுக்கொள்வாயாக!' என்று பாடியுள்ளார். இப்பாடல்களை பாடுபவர்கள் நரகம் செல்ல மாட்டார்கள் என்றும் உறுதியளிக்கிறார்.