ADDED : அக் 07, 2025 01:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான தாமிரபரணியில் நீராடி மகாவிஷ்ணுவை நோக்கி தவமிருக்கும்படி அவர் உபதேசம் செய்தார்.
தன் இருப்பிடமான விந்தியமலையில் இருந்து புறப்பட்டு தாமிரபரணி நதியை அடைந்து தவத்தில் ஈடுபட்டான். மகாவிஷ்ணுவும் அவனுக்கு காட்சியளித்து ஞானம் அளித்தார். அந்த இடமே திருநெல்வேலிக்கு அருகிலுள்ள 'கோடக நல்லுார்' ஆகும். இங்குள்ள பெருமாளுக்கு பெரியபிரான் என்பது திருநாமம். இவரை தரிசித்தால் ராகு, கேதுவால் ஏற்படும் சர்ப்ப தோஷம் விலகும்.