
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'வாசுதேவ் கிருஷ்ணா' எனக் கண்ணனை குறிப்பிடுவர். வசுதேவரின் மகனாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். கிருஷ்ணர் பிறக்கும் முன்பே, வாசுதேவன் என்னும் பெயர் வழக்கத்தில் இருந்தது.
விஷ்ணு சகஸ்ரநாமத்தில் கடைசியில் உள்ள பலச்ருதியில் (பலன் கூறும் பகுதி) ''எல்லா உயிர்களிலும் வசிக்கும் வாசுதேவனாகிய உனக்கு நமஸ்காரம்'' என இப்பெயர் உள்ளது. கிருஷ்ண அவதாரத்திற்கு முன்பே மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் நரசிம்மர். விஷ்ணு பக்தனான பிரகலாதன் தன் நண்பர்களுடன் பேசும் போது, மகாவிஷ்ணுவை 'வாசுதேவன்' என்னும் பெயரால் குறிப்பிடுகிறான்.