ADDED : அக் 07, 2025 01:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடராஜரின் கையிலுள்ள அக்னி ஞானத்தின் அடையாளம். ஞானத்தீ யார் மனதில் எரிகிறதோ, அவருக்கே கடவுள் தரிசனம் கிடைக்கும் என்பதை தீ உணர்த்துகிறது.
காட்டை அழிக்கும் நெருப்பு போல, மனதிலுள்ள அறியாமை என்னும் காட்டை நடராஜர் அழிக்கிறார் என்பதை நெருப்பு காட்டுகிறது. கையில் நெருப்பை வைத்து கொண்டு ஒருவன் சொன்னால், 'சொல்வது சத்தியம்' என்பர்.
நடராஜரும் நமக்கொரு சத்தியம் செய்து கொடுக்கிறார். ''என்னை நம்பி வந்தவர்களை நான் காப்பேன்'' என்பது தான் அது.