நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெய்வங்களிடம் இருக்கும் ஆயுதங்களைக் குழந்தைகளுக்கு பெயராக இடும் வழக்கம் இல்லை. சூலம், உடுக்கை, ஈட்டி என்று யாராவது பெயர் வைக்கிறார்களா? ஆனால் முருகனின் வேலைச் சிறப்பிக்கும் விதத்தில், வெற்றிவேல், கதிர்வேல், தங்கவேல், சக்திவேல், வடிவேல், முத்துவேல், வேலாயுதம், என்று பெயரிடுவர்.
கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்தில் முருகனை வணங்கும் போது, 'திருக்கைவேல் போற்றி போற்றி' என இரண்டு முறை போற்றுகிறார். முருகனுக்கு ஆறுமுகங்கள் இருப்பதைப் போல வேலுக்கும் ஆறு முகங்கள் உண்டு.

