
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முருகப்பெருமானுக்கும் எண் ஆறுக்கும் தொடர்பு அதிகம். இவருக்கு முகங்கள் ஆறு. இவரை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறுபேர். ஆறெழுத்து மந்திரத்திற்கு உரியவர். ஆறுபடை வீடுகளுக்கு சொந்தக்காரர். ஆறாம் திதியான சஷ்டியில், சூரசம்ஹாரம் செய்தவர்.
முருகனின் அடியவரான பாம்பன் சுவாமிகள் பாடிய குமாரஸ்தவம் என்னும் நுாலில், 'ஓம் சஷ்டி பதயே நமோ நம:' என உள்ளது. சஷ்டி தேவியின் தலைவனாக விளங்கும் சண்முகனுக்கு வணக்கம் என்பது பொருள். தெய்வானையின் ஆறில் ஓர் அம்சமாக அவதரித்தவள் சஷ்டிதேவி. இதனால் தெய்வானை சகஸ்ர நாமத்தில்,
'ஓம் ஷஷ்ட்யை நமஹ,
ஓம் ஷஷ்டீச்வர்யை நமஹ, ஓம் ஷஷ்டி தேவ்யை நமஹ'
என்ற மந்திரங்கள் உள்ளன.

