
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கந்தசஷ்டி விரதத்தின் போது முருகனின் வரலாறு கூறும் கந்தபுராணத்தை படிப்பது அவசியம். வடமொழி நுாலான சிவசங்கர சம்ஹிதையை தழுவி எழுதப்பட்டது கந்தபுராணம். இதை எழுதியவர் கச்சியப்ப சிவாச்சாரியார். இதில் ஆறு பகுதிகளில் 10,345 பாடல்கள் உள்ளன.
காஞ்சி குமரகோட்டத்தில் உள்ள முருகப்பெருமானே இந்நுாலுக்கு 'திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்' என்ற முதல்வரியை எடுத்துக் கொடுத்தார். இக்கோயிலில்தான் கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்நுாலின் தொடர்ச்சியான உபதேச காண்டம் குகனேரியப்ப நாவலரால் எழுதப்பட்டது. கம்பராமாயணம் மாணிக்கம் என்றால், கந்தபுராணம் நல்ல வேலைப்பாடுகளுடன் இழைக்கப்பட்ட மாணிக்கம் என்று தமிழ் அறிஞரான பரிதிமாற்கலைஞர் (சூரியநாராயண சாஸ்திரி) கூறியுள்ளார்.

