
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவர் வள்ளலார். அவரது வழிபாட்டு முறையில் அன்னதானம் முக்கியமானது.
இவர் வடலுாரில் தொடங்கிய சத்திய தருமசாலையில் ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்றும் பசிப்பிணி போக்கி வருகிறது.
ஜீவ காருண்யத்தின் பெருமையை வள்ளலார், ''ஏழைகளின் பசியைப் போக்குபவன் கடவுளின் தயவைப் பெறும் தகுதி பெறுகிறான். அன்னதானம் செய்பவரை இயற்கை சக்திகள் வாழ்த்தும். அவனை புயல், மழை, வெயில் வருத்தாது.
வறுமை தீண்டாது. கடவுள் அருள் காத்து நிற்கும். மனதில் எப்போதும் சந்தோஷம் குடியிருக்கும்'' என குறிப்பிட்டுள்ளார்.

