
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யாராலும் அணுக முடியாத மலை அண்ணாமலை. தேவர்களாலும் அறிய முடியாத பரம்பொருள் சிவபெருமான். ஆனால் பக்தர்கள் மீது கொண்ட கருணையால் தன்னை நெருப்பாக மாற்றிக் கொண்டு அருள்புரியும் நாள் திருக்கார்த்திகை.
சூரபத்மனின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் முறையிட்ட போது முருகனாக சிவன் அவதரித்தார். அவரது நெற்றிக்கண்ணிலிருந்து தீப்பொறிகள் புறப்பட்டு சரவணப் பொய்கையில் குழந்தைகளாக உருவெடுத்தன.
அதுபோல பெருஞ்சுடரான திருவண்ணாமலை தீபம், நம் வீட்டு வாசல்களில் அகல் தீபமாக பிரகாசிக்கிகிறது.

