ADDED : நவ 27, 2025 11:51 AM

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கம்பத்து இளையனார் சன்னதிக்குத் தெற்கே சிவகங்கை தீர்த்தம், காலபைரவர் சன்னதி எதிரில் பிரம்மதீர்த்தம் உள்ளன. மலையில் முலைப்பால் தீர்த்தம், பீம தீர்த்தம், அருட்பால் தீர்த்தம், பாத தீர்த்தம், அல்லிச்சுனை, அரளிச்சுனை, வழுக்குப்பாறை சுனை, அரசன் சுனை, மயிலாடும் பாறைச் சுனை, ஊத்துக் குட்டைச் சுனை, பவழக்குன்றுச் சுனை, கழுதை குறத்திச் சுனை, சாரங்கன் சுனை, கரடிச்சுனை, தனக்க மரத்துச்சுனை, புங்கமரத்துச் சுனை, நெல்லிமரத்துச் சுனை, ஆலமரத்துச் சுனை, குமார சுனை, கல்சுத்தி மரத்துச் சுனை, தொல்லாங்கன் சுனை, இடுக்குச்சுனை, வலக்கையால் பாறையைப் பிடித்து இடக்கையால் மட்டுமே நீர் அருந்தும் ஒறட்டுக்கை சுனை (ஒறட்டு என்றால் இடது), தவழ்ந்து சென்று நீர் குடிக்கும் 'புகுந்து குடிச்சான் சுனை' ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.
அடி அண்ணாமலை அருகில் பொங்குமடு, துர்க்கை அம்மன் கோயில் அருகில் கட்க தீர்த்தம், ரமணாஸ்ரமம் அருகில் சிம்ம தீர்த்தம் உட்பட 360 தீர்த்தங்கள் மலையைச் சுற்றும் பகுதியில் உள்ளன.

