ADDED : ஜூலை 18, 2024 12:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூரில் இருந்து சின்னதாராபுரம் வழியில் 40 கி.மீ., துாரத்தில் உள்ள பெரிய திருமங்கலம் அருங்கரை அம்மன் கோயிலில் பெண்களுக்கு அனுமதியில்லை.
கோயிலுக்கு வெளியே நின்று தரிசிக்கலாம். கருவறையில் அம்மனுக்கு சிலை கிடையாது. விநாயகருக்கு மட்டும் சன்னதி உள்ளது. இப்பகுதியிலுள்ள ஆண்கள் ஒரு செவ்வாயன்று நள்ளிரவு நேரத்தில் அம்மனின் அருட்சக்தி இங்கு குடியிருப்பதை உணர்ந்தனர். இதன் காரணமாக செவ்வாயன்று மட்டும் திறக்கப்பட்டு நள்ளிரவு பூஜை நடக்கிறது.