
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புகழ் பெற்ற கோயில்களில் ஒன்று சங்கரன்கோவில். இக்கோயில் தென்காசி மாவட்டத்தில் அமைந்த பஞ்சபூத தலங்களில் மண் தலத்திற்கு உரியது. இதன் சிறப்புகள் சில...
சைவத்தில் வழிபடும் கடவுள் சிவபெருமான். வைணவத்தில் வழிபடும் கடவுள் மகாவிஷ்ணு. இவர்கள் இருவரும் ஒருவரே. வெவ்வேறானவர் இல்லை என்பதை எடுத்துக்காட்டும் தலம் சங்கரன்கோவில். இங்கு சங்கரனும் நாராயணரும் இணைந்த கோலத்தில் காட்சியளிக்கின்றனர்.
ஆடி உத்திராடம் அன்று கோமதியம்மனுக்கு சங்கரநாராயணராக காட்சியளித்தார் சிவபெருமான். இந்த விழாவே ஆடித்தபசு.
அன்று மாலையில் சங்கரநாராயணராகவும், இரவில் சங்கரலிங்கப் பெருமானாகவும் காட்சியளிப்பார்.