நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகதோஷத்தால் சிரமப்படுபவர்களுக்கு பரிகாரத் தலமாக விளங்குவது சங்கரன்கோவில்.
ஒருமுறை சிவபெருமான் பெரியவரா, மகாவிஷ்ணு பெரியவரா என்ற சந்தேகம் நாக அரசர்களுக்கு ஏற்பட்டது. தேவகுருவாகிய வியாழ பகவான் இத்தலத்திற்கு (புன்னைவனம்) செல்லுங்கள் என அவர்களை சொன்னார்.
அதன்படி இங்கு சுனை (தெப்பம்) ஒன்றை ஏற்படுத்தி சங்கரலிங்கத்தை வழிபட்டனர் நாகஅரசர்கள். சங்கரநாராயணர் வடிவத்தை அவர்களுக்கு காட்டினார் சிவபெருமான். நாக தோஷமுள்ளவர்கள் இங்கு வந்தால் தோஷம் நீங்கும் என நாக அரசர்கள் வாக்குறுதி கொடுத்தனர்.