
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருமுறை சிவன் மீது கோபம் கொண்டாள் பார்வதி. சில நாட்கள் கடந்ததும் பெயரளவில் கோபமே தவிர அவளின் ஆழ்மனதில் அன்பு பீறிட்டது. இதை வெளிப்படுத்தாமல் மவுனம் காத்தாள்.
மனைவியின் பொய்க் கோபத்தை (ஊடல்) உணர்ந்த சிவனும், அவளின் காலில் விழுந்து தன்னை ஏற்குமாறு வேண்டினார். அப்போது அங்கு வந்த பாலகணபதி, தந்தை சிவனின் தலையில் இருந்த மூன்றாம் பிறையை துதிக்கையால் இழுக்க முயன்றார். கணபதியின் விளையாட்டைக் கண்டு ரசித்த சிவன் மகனை(விநாயகரை) அணைக்க முயன்றார்.
பார்வதியும் அவ்வாறே செய்ய முயன்றாள். சிவன், பார்வதி இருவரின் கைகளும் ஒன்றோடொன்று மோதின. பாலகணபதியின் விளையாட்டால் சிவ, பார்வதியின் ஊடல் மறைந்து சேர்ந்தனர்.