
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதினத்தின் 10ம் குருமுதல்வர் வேலப்ப தேசிகர்.
தல யாத்திரையாக சங்கரன்கோவிலுக்கு வந்த இவர், சுவாமி அம்மனை வழிபாடு செய்தார். இங்குள்ள மக்களுக்கு ஏற்படும் உடல், மன நோய்களை நீக்குவதற்காக அம்மன் சன்னதியில் யந்திரத்தை பிரதிஷ்டை செய்தார்.
இதையறிந்த நெற்கட்டான் செவல் புலித்தேவருக்கு ஏற்பட்ட கடும் வயிற்று வலி நீங்க வேண்டும் என வேலப்ப தேசிகரிடம் சரணடைந்தார். நோயை குணமாக்கிய அவரிடமே சீடரானார். அவருடைய வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்திய வேலப்ப தேசிகர் ஒரு புரட்டாசி மூலநட்சத்திரத்தில் சிவபதம் அடைந்தார்.
கோயிலின் மேலரத வீதியில் இவரது சமாதி உள்ளது. இன்றும் பக்தர்களின் பிரச்னையை தீர்க்கும் இவர் பேசும் தெய்வமாக திகழ்கிறார்.