ADDED : நவ 24, 2023 04:03 PM

கண்டங் கரிய மலை கண்மூன்று உடைய மலை
அண்டர் எல்லாம் போற்றும் அரியமலை - தொண்டர்க்கு
தோற்றுமலை நாளும் தொழுவோர் எழுபிறப்பை
மாற்றுமலை அண்ணாமலை.
சிவபெருமானின் வடிவம் தான் இம்மலை. இதனை உலகில் வாழும் எல்லோரும் போற்றுகிறார்கள். தொண்டர்களின் கஷ்டங்களை நொடிப்பொழுதில் போக்கும் மலையாக இது இருக்கிறது. நாள்தோறும் புதியவர்கள் பலரும் வந்து வணங்கிச் செல்கிறார்கள் என்கிறார் குகை நமச்சிவாயர்.
'கங்கை அணி தீபம் கற்பூரத் தீபமலை
மங்கையொரு பங்கில் வளர்தீபம் - பங்கயன்பால்
விண்பாரு தேடும் வண்ணம் மேவிய அண்ணாமலையின்
பண்பாரும் கார்த்திகை தீபம்.
இம் மலையில் தான் சிவபெருமானின் அடிமுடியை பிரம்மாவும் விஷ்ணுவும் தேடினார்கள் என்கிறார் சோணாசல முதலியார். கார்த்திகை பவுர்ணமி நாளில் பிரதோஷநேரத்தில் மலைமேல் ஜோதி தரிசனம் கண்டு அவரிடம் இடப்பாகத்தினை தவமிருந்து பெற்றாள் அம்பிகை. வாழ்வில் வெற்றி பெற அண்ணாமலையை நினையுங்கள் நிம்மதி அடையுங்கள்.