sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

ஓலைச்சுவடி

/

ஓலைச்சுவடி

ஓலைச்சுவடி

ஓலைச்சுவடி


ADDED : டிச 15, 2023 11:00 AM

Google News

ADDED : டிச 15, 2023 11:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்வி என்பது ஒருவரது வாழ்க்கையை மாற்றும் ஆபரணமாகும். அந்தக் காலத்தில் கல்வி பயில ஓலைச்சுவடிகளே பயன்பட்டுள்ளன.

இது அறிவின் உருவகமாகப் போற்றப்படுகின்றன. தற்போது எப்படி புத்தகங்களோ அந்தக் காலத்தில் ஓலைச்சுவடி. இதனால்தான் ஞானத்தைப் போதிக்கும் தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி தேவி கைகளில் சுவடியை ஏந்திய நிலையில் காட்சி தருகின்றனர். ஹயக்ரீவரும் கையில் சுவடி வைத்திருப்பார்.

இவர்களைப்போன்று வசிஷ்டர், வியாசர், கம்பர், அருணகிரிநாதர் போன்றோரையும் சுவடிகளுடன்தான் காண முடியும். திருஞானசம்பந்தர் வாழ்விலும் சுவடிக்கு முக்கிய இடம் உண்டு. இவர் சமணர்களோடு அனல்வாதம், புனல்வாதம் செய்தபோது அவர் வைகை ஆற்றில் இட்ட ஏடு நீைர எதிர்த்துச் சென்று கரை சேர்ந்தது. இந்த இடம்தான் மதுரையில் உள்ள 'திருஏடகம்'. இதுதான் தற்போது திருவேடகம் எனப்படுகிறது. இதைப்போல் நெருப்பில் இட்டும் எரியாத ஏடு, 'போகமார்ந்த பூண்முலையாள்' என்ற திருநள்ளாற்றுப் பதிகத்தை கொண்ட ஏடு.

மாணிக்கவாசகரும் கையில் சுவடியை வைத்திருப்பார். அதில் 'திருச்சிற்றம்பலம்', 'நமச்சிவாய வாழ்க' எனவும் பொறிக்கப்பட்டிருக்கும். சுந்தரரும் இந்த ஏட்டினால்தான் சிவபெருமானின் அடியவராக மாறுகிறார். இவர் திருமணம் செய்து கொள்ள இருந்தபோது, சிவபெருமான் வயது முதிர்ந்த பிராமணர் வடிவில் ஓலையுடன் வந்தார். அதில் 'இந்த சுந்தரன் எனக்கு அடிமை.

இவனுடைய தாத்தா எனக்கு ஓலை எழுதி தந்திருக்கிறார். எனவே இவன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது' என தடுத்து ஆட்கொண்டார். பின் சுந்தரர் 'பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா' என பாடுகிறார். அதில் சிவபெருமான் தன்னை ஓலை காட்டி ஆண்டகொண்டார் எனவும் குறிப்பிடுகிறார்.

கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடி மேல் வைத்த

அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு,

மங்கையர் வதன சீத மதிஇரு மருங்கும் ஓடிச்

செங் கயல் குழைகள் நாடும் திருமுனைப்பாடி நாடு.

இப்படி கல்விக்கு மிகவும் பயன்படக்கூடிய ஒன்றாக இருந்துள்ளது ஓலைச்சுவடி.






      Dinamalar
      Follow us