ADDED : டிச 15, 2023 11:31 AM

வடநாட்டிலுள்ள முக்திதலங்களில் ஒன்றான கேதாரம், சீர்காழி அருகேயுள்ள திருக்கோலக்கா, மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருச்சாய்க்காடு என்னும் சாயாவனம், திருத்துருத்தி என்னும் குத்தாலம், திருவாவடுதுறை, திருவெண்காடு, கருங்குயில்பேட்டை, கும்பகோணத்திலுள்ள குடந்தை கீழ்கோட்டம், அதன் அருகேயுள்ள திருநாகேஸ்வரம், திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருமீயூச்சூர், ஸ்ரீவாஞ்சியம் அதன் அருகேயுள்ள தேதியூர் ஆகிய பன்னிரு தலங்களும் சூரியனால் வழிபடப்பெற்றவை.
இத்தலங்களில் சித்திரை, ஆவணி, கார்த்திகையில் வரும் ஒவ்வொரு ஞாயிறு மற்றும் தையில் வரும் ரதசப்தமியில் அதிகாலையில் தீர்த்தத்தில் நீராடி அங்குள்ள சிவபெருமானை வழிபடுவது பெரும் புண்ணியத்தை தரும். வெற்றி மீது வெற்றி வரும். கர்மவினை தீரும்.
இத்தலங்களில் உள்ள தீர்த்தத்தில் நீராடுவதால்...
* மனக்குழப்பம், கெட்ட எண்ணம் ஏற்படாது.
* சகோதரருக்கு செய்த குற்றம் நீங்கும்.
* போதை பழக்கத்தில் இருந்து விடுபடுவீர்.
* பெற்றோரை அவமதித்த தீங்கு அகலும்.
* பெண் சாபம், முன்ஜென்ம வினைகள் தீரும்
* பெண்களுக்கு தெரியாமல் செய்த பாவம் நீங்கும்.
* பிரம்மஹத்தி தோஷம் விலகும்.
* இழந்த தெய்வஅருளை பெறுவீர்கள்.
* உடல், உள்ளத்திற்கு புத்துணர்ச்சியை பெறுவீர்.
-கே.குமார சிவாச்சாரியார்