ADDED : டிச 15, 2023 11:36 AM

பலருடைய வாழ்வில் வெற்றி,தோல்வி என்பது ஒரே நேரத்தில் வருவதில்லை. மாறி மாறி அவரவரின் கர்ம வினைப்படியே நடக்கிறது. எப்போதும் வெற்றியான வாழ்க்கை வாழணுமா... தினமும் விபூதி அணியுங்கள்.
விதவிதமான ஆடைகள், வாசனை பவுடர்களை அணிந்து கொண்டு பணிக்கு செல்வோர்கள் பலரும் நெற்றியில் விபூதி என்னும் திருநீற்றை அணிய வெட்கப்படுகிறார்கள். தினமும் திருநீறு அணிந்தால் தலைவிதி மாறும் என்கிறது க்ரியாசாரம் என்ற நுால்.
* அணிபவரை பிரகாசமாக வாழ வைப்பதால் 'பசிதம்'
* அணிபவருக்கு பாதுகாப்பாக இருப்பதால் 'ரட்சை'
* பாவம் களைவதால்- 'பஸ்மம்'
* விதியை மாற்றி ஐஸ்வர்யம் தருவதால் 'விபூதி' என்றும் பெயர்.
* நாயன்மார்களின் ஒருவரான திருமூலர் 'கங்காளன் பூசும் கவசத்திருநீற்றை மங்காமல் பூசி மகிழ்வீரே' என்கிறார். திருஞானசம்பந்தரும் இதன் பெருமையை திருநீற்றுப்பதிகத்தில் பாடியுள்ளார்.