
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முருகனை வளர்த்த கார்த்திகை பெண்கள் அறுவரும், அஷ்டமா சித்திகளை உபதேசிக்க வேண்டும் என சிவபெருமானிடம் வேண்டினார்கள். சுவாமியோ அம்பிகை மூலம் அவர்களுக்கு உபதேசித்தார்.
அந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் கவனக்குறைவாகவும் அலட்சியமாகவும் அவர்கள் இருந்ததால் பாறையாக மாறுவீர்கள் என சாபம் பெற்றனர். தவறை உணர்ந்த அவர்கள் விமோசனம் பெற்ற தலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பட்டமங்கலம். முன்பு பட்ட மங்கை எனப்பட்ட இத்தலம் தற்போது பட்டமங்கலம் என அழைக்கப்படுகிறது.
இங்கு கிழக்கு நோக்கி தட்சிணாமூர்த்தி அருள் செய்கிறார். அடிக்கடி கவனக்குறைவு உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்யுங்கள். எல்லா நலன்களும் வந்து சேரும்.