ADDED : டிச 22, 2023 05:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவபெருமான் திருமுடியை கண்டேன் என தாழம்பூவின் உதவியோடு பிரம்மா பொய் சொன்னார். அந்தக் குற்றத்திற்காக அன்றில் இருந்து சிவபெருமானுக்கு ஆகாத பூக்களில் தாழம்பூ சேர்ந்தது. ஆனால் ராமநாதபுர மாவட்டத்தின் அருகிலுள்ள உத்திரகோசமங்கையில் எழுந்தருளியுள்ள மங்களநாதருக்கு தாழம்பூ சாற்றும் வழக்கம் உள்ளது.
ஏனெனில் பல யுகங்களுக்கு முன்பிருந்தே இந்த சுவாமி உள்ளார். அதனால் இக்கோயிலை ஆதிசிதம்பரம் என்பர். இங்குள்ள அம்பிகை பெயர் மங்களேஸ்வரி. மாணிக்கவாசகரால் திருவாசகம் பாடப்பெற்ற தலம். ஆனித்திருமஞ்சனம், மார்கழித்திருவாதிரை போன்ற தினங்களில் இங்கு நடராஜரை தரிசனம் செய்வது சிறப்பு.