ADDED : டிச 15, 2023 11:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்த போது, தேவேந்திரன் சீதனமாக பொன்னும் பொருளும் பரிசளித்தார். அதில் தேவலோகத்திலுள்ள ஐராவதம் என்னும் வெள்ளை யானையும் இடம் பெற்றிருந்தது. இதன் பின் இந்திரனின் செல்வச் செழிப்பு குறைய ஆரம்பித்தது. செல்வத்தின் அடையாளமான ஐராவதம், தன்னை விட்டுப் பிரிந்ததே இதற்கு காரணம் என்பதை உணர்ந்த இந்திரன், தன் மருமகன் முருகனிடம் ஆலோசித்து, யானையை தேவலோகம் இருக்கும் கிழக்கு திசை நோக்கி இருக்கச் செய்தார். அதன் பின் இந்திரனின் செல்வ வளம் அதிகரித்தது. இதனடிப்படையில் திருத்தணியில் வாகனமான யானை கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இதை தரிசிக்க பணப்பிரச்னை நீங்கும்.