ADDED : ஜன 12, 2024 04:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயிரம் கரங்கள் நீட்டி
அணைக்கின்ற தாயே போற்றி
அருள்பொங்கும் முகத்தைக் காட்டி
இருள்நீக்கம் தந்தாய் போற்றி
தாயினும் பரிந்து சாலச் சகலரை
அணைப்பாய் போற்றி
தழைக்குமோர் உயிர்கட்கெல்லாம்
துணைக்கரம் கொடுப்பாய் போற்றி
துாயவர் இதயம்போல
துலங்கிடும் ஒளியே போற்றி
துாரத்தே நெருப்பை வைத்து
சாரத்தை தருவாய் போற்றி
ஆயிரக்கணக்கில் கதிர் வீசி எங்களை அணைக்கின்ற தாயே. அருள் பொங்கும் முகம் காட்டி இருளைப் போக்குபவனே. தாயினும் அன்பு காட்டி அனைவரையும் ஆதரிப்பவனே. பூமியில் தழைக்கும் தாவரம் முதலான எல்லா உயிர்களுக்கும் துணையாய் இருப்பவனே. நல்லவர்களின் வெள்ளை உள்ளம் போல் பிரகாசிப்பவனே. நெருப்பை உனதாக்கிக் கொண்டு வெப்பத்தை மட்டும் தருபவனே. உன்னைப் போற்றுகிறேன்.