ADDED : பிப் 09, 2024 11:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முன்னோர்களுக்கு கொடுக்கும் திதி, தர்ப்பண பலன்களை பிதுர் தேவதைகளிடம் கொடுப்பவர் சூரியபகவான். இதனால் சூரியபகவானுக்கு 'பிதுர்காரகன்' என பெயர் ஏற்பட்டது. அமாவாசையன்று தீர்த்தக்கரைகளில் நீராடும் போது சூரிய பகவானுக்கு அர்க்கியம் கொடுப்பது (இரு கைகளாலும் நீரை அள்ளி கீழே விடுவது) நல்லது. தினமும் காலையில் அர்க்கியம் கொடுத்தால் சூரிய பகவானின் அருள் கிடைப்பதுடன் முன்னோர் ஆசியும் கிடைக்கும்.