நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்கள் பித்ருக்கள் எனப்படுவர். இவர்களின் ஆத்மா சாந்தி அடையாததால் ஏற்படுவது பித்ருதோஷம். ஒருவர் முற்பிறவியில் தாய், தந்தையை புறக்கணிப்பது, உடன் பிறந்தோரை அவமதிப்பது, கருச்சிதைவு செய்வது போன்ற தீச்செயல்களில் ஈடுபட்டால் பித்ரு தோஷம் ஏற்படும். இதனால் கஷ்டம் வாழ்வில் தொடர்ந்திடும். பரிகாரமாக அமாவாசையன்று விரதமிருந்து வழிபடுவது நல்லது. தை, ஆடி, மகாளய அமாவாசையன்று தர்ப்பணம் கொடுத்து தானம் செய்யலாம்.