
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'மாதங்களில் மார்கழியாகவும் இலைகளில் துளசியாகவும் நான் இருக்கிறேன்' என்கிறார் கிருஷ்ணர்.
துளசி செடி வளரும் இடத்தில் தெய்வீக சக்தி நிறைந்திருக்கும். வீட்டின் அருகில் துளசிவனம் இருந்தால் குடும்பத்தில் நல்லெண்ணம் மேலோங்கும். தீய எண்ணம், தீய வார்த்தை, தீய செயல்கள் கொண்ட மனிதர்களால் வளர்க்கப்படும் துளசி கருகிவிடும். வீட்டின் வடக்கு, வடகிழக்கு திசையில் துளசியை வளர்த்தால் வாஸ்து பிரச்னை விலகும்.
துளசியை பார்த்தால் தலைக்கு வந்த பிரச்னை தலைப்பாகையுடன் போகும். மனத்துாய்மையுடன் ஒரு துளசி இலையை ஸ்ரீ கிருஷ்ணரின் பாதங்களில் சமர்ப்பிக்கும் போது செல்வத்தை வாரி வழங்குவாள் மகாலட்சுமி.