ADDED : பிப் 09, 2024 11:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பலரும் உடல், உடை துாய்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் அதை விட துாய்மையாக ஒன்றை வைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் உள்ளம். இந்த உள்ளம் சுத்தமாக இல்லாவிட்டால் உடலும், உடையும் பளிச்சென இருந்தாலும் பயன் இல்லை. எனவே உள்ளத்தில் அழுக்கு படியாமல் அதை அவ்வப்போது நல்ல எண்ணங்களால் கழுவிக் கொண்டே இருக்க வேண்டும்.
தவறு செய்வதுதான் மனதின் அழுக்கு. அதாவது தவறான செயல்களை செய்யக்கூடாது. சொல்லப்போனால் மனதால்கூட பிறருக்கு தீங்கு நினைக்கக்கூடாது. இதுபோல் வாழ்ந்தால் பகவான் எப்போதும் நமக்கு துணை நிற்பார்.