ADDED : பிப் 23, 2024 11:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இறப்பற்ற நிலையை அடைவதற்காக தேவர்கள் அமுதம் பெற விரும்பினர். பாற்கடலை கடைய காமதேனு, கற்பக மரம் என அபூர்வ வஸ்துக்கள் வெளிவந்தன. மகாலட்சுமியும் அதில் தோன்றினாள். அவளின் அழகில் மயங்கிய மகாவிஷ்ணு மணம் புரிந்தார். கடல் அரசனான சமுத்திரராஜனின் மருமகன் ஆனார் மகாவிஷ்ணு.
மகாலட்சுமி வைகுண்டம் புறப்பட்ட போது 'மகளை எங்கே எப்போது காண்பேன்?' என்ற வருத்தம் சமுத்திரராஜனுக்கு எழுந்தது. இதையறிந்த விஷ்ணு,''கவலை வேண்டாம். ஆண்டுக்கு ஒரு முறை மாசிமகத்தன்று தீர்த்தக்கரைகளில் லட்சுமியுடன் எழுந்தருளி நீராடுவேன்'' எனத் தெரிவித்தார். மாமனாருக்கு அளித்த வாக்குப்படி, மாசிமகத்தன்று மகாலட்சுமியுடன் எழுந்தருள்கிறார்.