நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீனவப்பெண்ணாக அவதரித்த பார்வதியை மணம்புரிய சிவனும் மீனவ இளைஞனாக வந்தார். பார்வதியின் தந்தை கடல் அரசனின் கவனத்தை திருப்ப, திமிங்கலம் ஒன்றை அடக்கினார். அதன் பின் பார்வதிக்கு சிவனுடன் திருமணம் நடந்தது. இருவரும் கைலாயம் புறப்பட்ட போது, ''தங்களையும், என் மகளாக அவதரித்த பார்வதியையும் எப்போதும் தரிசிக்கும் பாக்கியத்தை நான் பெற வேண்டுமே...'' என்று கடல் அரசன் கேட்டார்.
''ஆண்டுதோறும் மாசிமகத்தன்று நாங்கள் கடலில் நீராட வருகிறோம்; நீங்கள் தரிசிக்கலாம்'' என வரமளித்தார். அதன்படியே மாசிமக நீராடல் விழா நடக்கிறது.