ADDED : பிப் 23, 2024 11:41 AM

மாசிமகத்தன்று, சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் வித்தியாசமான வகையில் விளக்கு வழிபாடு நடக்கும்.
இங்குள்ள தெப்பக்குளத்தின் கரையில் பெண்கள் தாங்கள் ஏற்கனவே வேண்டிக் கொண்ட கோரிக்கை நிறைவேறியதற்காக விளக்கு ஒன்றை ஏற்றி வைப்பர். அந்த விளக்கை இவ்வாண்டில் கோரிக்கை வைப்பவர்கள், தங்கள் வீட்டிற்கு எடுத்து வந்து விடுவர். அடுத்த மாசிமகம் வரை வீட்டில் அந்த விளக்கை விடாமல் தொடர்ந்து ஏற்றுவர். இவ்வாறு செய்பவர்கள், தங்கள் கோரிக்கை நிறைவேறியதை அடுத்து வரும் மாசிமகத்தன்று குளக்கரையில் ஏற்ற வேண்டும். திருமணம், குழந்தைப் பேறு, ஏழ்மை நீக்கம், பணி கிடைத்தல், பணியிலுள்ள இடைஞ்சல் நீங்குதல் முதலான நியாயமான கோரிக்கைகளுக்காக இந்த வேண்டுதலைச் செய்யலாம். இந்தக் கோயிலில் பிப்.24ல் தெப்பத்திருவிழா நடக்கிறது.