ADDED : மார் 08, 2024 02:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ளது கைலாசநாதர் கோயில். வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி என்னும் மன்னருக்காக பன்றி வடிவில் சிவன் அருள்புரிந்த தலம் இது.
கொல்லிமலையை ஆட்சி செய்தவர் வல்வில் ஓரி. சிவபக்தரான இவர் வேட்டைக்குச் சென்றார். அவருக்கு காட்சியளிக்க எண்ணிய சிவன் காட்டுப்பன்றி வடிவில் தோன்றினார். அதைக் கண்டதும் பன்றி மீது அம்பு எய்து கொன்றார். அருகில் சென்ற போது, பன்றி விழுந்த இடத்தில் ரத்தம் வழிந்த நிலையில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். உண்மையை உணர்ந்து தவறை மன்னிக்கும்படி வேண்டினார். சிவபெருமான் லிங்கத்தில் இருந்து தோன்றி அருள்புரிந்தார். பின்னர் அங்கேயே கோயில் கட்டி சுவாமிக்கு 'கைலாசநாதர்' எனப் பெயரிட்டார்.
அறியாமல் செய்த பாவம் போக்குபவராக சிவன் இங்கிருக்கிறார்.