நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
''சுவாமி...உங்களை வழிபட ஏற்ற நாள் எது?” என சிவனிடம் கேட்டாள் பார்வதி.
''மாசி மாத தேய்பிறை 14ம்நாளான சதுர்த்தசியே (அமாவாசைக்கு முந்திய நாள்) மிக உகந்தது.
எனது அம்சமான சிவலிங்கத்திற்கு மகாசிவராத்திரியன்று நான்கு ஜாமங்களில் பால், தயிர், வெண்ணெய், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து வழிபடு. இதன் பெருமையை வேறு எந்த விரதங்களோடும் ஒப்பிட முடியாது” என்றார்.
சிவனின் விருப்பமறிந்த பார்வதி, தன் தோழியரான அநிந்திதை, கமலினியிடம் தெரிவித்தாள். அவர்கள் பூலோகவாசிகளிடம் சொல்ல கோயில்களில் சிவராத்திரி பூஜை நடக்கத் தொடங்கியது.