
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நர்மதை நதிக்கரையில் யாகம் நடத்திய மகாபலியிடம் மூன்றடி மண்ணை தானமாக கேட்டார் வாமனராக வந்த மகாவிஷ்ணு. அவரும் சம்மதித்தார்.
வாமனராக வந்திருப்பது மகாவிஷ்ணு என்ற உண்மையை அறிந்த அசுரகுரு சுக்கிராச்சாரியார் தானத்தை தடுக்க முயன்றார். வண்டு வடிவெடுத்து மகாபலி வைத்திருந்த தீர்த்த பாத்திரத்தின் வாய்ப்பகுதியை அடைத்தார். சுக்கிராச்சாரியாரின் தந்திரத்தை அறிந்த வாமனர், தர்ப்பபை புல்லால் தீர்த்தம் வெளியாகும் வாய்ப்பகுதியை அழுத்தினார்.
வண்டாக நின்றிருந்த சுக்கிராச்சாரியாரின் கண்ணில் தர்ப்பை பட்டு பார்வை போனது. சென்னை மயிலாப்பூர் அருகிலுள்ள வெள்ளீஸ்வரரை வழிபட்டு இழந்த பார்வையை பெற்றார். கண்நோய், பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் ஞாயிறு, திங்கட்கிழமைகளில் குரு ஹோரையில் வழிபட்டு பலன் அடைகின்றனர்.