
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். நினைத்த வடிவத்தைப் பெறும் ஆற்றல் கொண்டிருந்தான். ஒருமுறை இவன் விளையாட்டாக சிவனை ஏமாற்ற விரும்பினான். எனவே உமையவளின் உருவம் கொண்டு சிவனை நெருங்கினான்.
இதனை அறிந்ததும் அரக்கனை நெற்றிக் கண்ணால் எரித்தார் சிவன். அவன் நோக்கம் சிவனை அடைய வேண்டும் என்பதை அறிந்த உமையவள், அவன் மீது இரக்கம் கொண்டாள். அவன் நினைவாக ஒரு மாதத்திற்கு 'ஆடி' என்று பெயரிட்டு அதில் அம்மனுக்கு வழிபாடு நடத்தும் வழக்கத்தையும் ஏற்படுத்தினர்.