
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அஞ்ஞான வல்லிருள் போய் அன்பர்குணக்
குன்றின்மிசை
மெய்ஞ்ஞான பானுவெளி தோன்றச் -
செஞ்ஞான
நாதத் தொனி கூவும் நற்கொடிப் போரூரன்
இரு பாதத்தை நெஞ்சே பணி.
அறியாமை என்னும் இருளை நீக்குபவனே. பக்தர்களை குணக்குன்றாக விளங்கச் செய்பவனே. எங்கும் அறிவுச்சுடரை பரவச் செய்பவனே. கொக்கரக்கோ என்னும் உயர்ந்த ஞான நாதத்தை கூவி அழைக்கும் சேவலைக் கொடியாக பெற்றவனே. திருப்போரூர் முருகனே. உன் திருவடியை என் நெஞ்சம் வணங்குகிறது.