
* ஒரு கோயிலுக்கு சுவாமியைப் போல தலவிருட்சம் முக்கியம்.
* எல்லா உயிரினங்களுக்கும் மரங்களே உணவு, இருப்பிடம் தருகின்றன. அவற்றைப் பாதுகாக்க உருவானதே தலவிருட்ச வழிபாடு.
* கடவுளுக்குரிய பூக்களை தருவதோடு வழிபடுவோருக்கு அருளையும் தலவிருட்சங்கள் தருகின்றன.
* தலவிருட்சங்களுக்கு தண்ணீர் ஊற்றினால் தோல் நோய்கள் குணமாகும்.
* கோயில்களில் சுவாமியை வழிபட்டபின் பிரகாரத்தைச் சுற்றி வரும் போது கடவுளின் மறுவடிவமான தலவிருட்சங்களை வழிபட வேண்டும்.
* தலவிருட்சங்கள் கோயிலின் வரலாற்றை நமக்கு எடுத்துச் சொல்கின்றன. பெயர்ப்பலகை, வழிகாட்டி என எந்த அடையாளமும் இல்லாத அந்தக் காலத்தில் கடவுளின் இருப்பிடத்தை தலவிருட்சமே அடையாளப்படுத்தின.
* சில கோயில்களில் தலவிருட்சம் கருவறைக்கு பின்புறத்தில் இருக்கும். சுயம்பு மூர்த்தியாக மூலவர் உள்ள கோயில்களில் தலவிருட்சமே முதலில் தோன்றின.