தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/உடனடி தீர்வுக்கு...

உடனடி தீர்வுக்கு...

உடனடி தீர்வுக்கு...


ADDED : மே 17, 2024 08:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2024 08:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நோய், மனக்கோளாறு, திருமணத்தடை, குழந்தையின்மை, கடன் பிரச்னைகளால் சிரமப்படுபவர்கள் இந்த நரசிம்மர் மந்திரத்தை 48 முறை தினமும் சொல்லுங்கள். காய்ச்சிய பசும்பாலை நைவேத்தியம் செய்யுங்கள்.

மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:

ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:

வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:

ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:

இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:

யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:

ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:

தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே:

1. நரசிம்மனே தாய்; நரசிம்மனே தந்தை

2. சகோதரனும் நரசிம்மனே; தோழனும் நரசிம்மனே

3. அறிவும் நரசிம்மனே; செல்வமும் நரசிம்மனே

4. எஜமானனும் நரசிம்மனே; எல்லாமும் நரசிம்மனே

5. இந்த லோகம் முழுவதிலும் நரசிம்மனே; பரலோகத்திலும் நரசிம்மனே.

6. எங்கெங்கு நீ செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மனே

7. நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை.

8. அதனால் நரசிம்மனே; உம்மைச் சரணடைகிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us