
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கமேனிப் பேரொளி தாங்கு நுாலின் நாயகன்
சிங்கநேர்த்தி தைரியன் ஜகம் காக்கும் சவுரியன்
தங்கு பூத மாயினான் தனித்த துாய நேயனாம்
எங்கள் வாயு புத்திரன் ஏற்றவீரம் போற்றுவோம்.
பொன்னழகு மேனியனே. கல்வியறிவு மிக்கவரே. சிங்கம் போல வீரம் கொண்டவரே. உலகத்தை காத்தருளும் அழகே. ஐம்பூதங்களைத் தாங்குபவரே. துாய்மையும், நேர்மையும், அன்பும் மிக்கவரே. வாயுவின் பிள்ளையே. ஆஞ்சநேயப் பெருமானே. உமது வீரத்தைப் போற்றி வணங்குகிறோம்.