
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யானே பொய் என் நெஞ்சும்
பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால்
உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின்
தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன்
உனை வந்துறுமாறே.
நான் பொய் ஒழுக்கம் கொண்டவன். என் நெஞ்சமோ வஞ்சனை மிக்கது. என் அன்பு போலியானது.
இப்படி தீவினைகளைக் கொண்டவனாக இருந்தாலும் செய்தவற்றை நினைத்து அழுதால் உன்னருளைப் பெற்று மகிழலாம்.
தேனும், அமிர்தமும், கரும்பின் சுவையும் போன்ற சிவபெருமானே. அடியார் உள்ளத்தில் இனிப்பாகத் திகழ்பவனே. கொடியவனான நானும் உன்னை வந்தடையும் வழியைக் காட்டுவாயாக என உருகுகிறார் மாணிக்கவாசகர்.