
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூலோகத்திற்கு பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆகிய சப்த (ஏழு) கன்னியர்களுடன் வந்த சிவன் ஓரிடத்தில் ஓய்வெடுத்தார். இவ்விடத்தின் அழகில் மயங்கிய சப்தகன்னிகள், தாங்கள் அங்கேயே தங்கிக்கொள்வதாக சிவனிடம் வேண்டினர்.
ஒப்புக்கொண்ட சிவன் அவர்களுக்கு பாதுகாவலராக விநாயகர், நந்தியை பாதுகாப்பாக விட்டுச் சென்றார்.
இத்தலம் துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள முக்கூட்டு மலையின் அடிவாரத்தில் உள்ளது.
இங்குள்ள கன்னி விநாயகர் கன்னிப் பெண்களின் காவலராக திகழ்கிறார். இவருக்கு மூஞ்சூறுக்கு பதிலாக நந்தியே வாகனமாக உள்ளது.