நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லில் இருந்து பெறப்படும் பொரி வெள்ளையாக இருக்கும். இதன் உள்ளே வெற்றிடம், மிகக் குறைந்த எடையும் கொண்டது. லேசான காற்றிலும் இது பறந்து விடும். ஆனாலும் நைவேத்யம் செய்கிறோம்.
ஆனால் உடல் பலம், பணபலம், ஆள்பலம் கொண்ட மனிதன் கடவுளை அடைய எந்த முயற்சியும் எடுப்பதில்லை.
எடை குறைந்த பொரி போல, மனதை வெறுமைப்படுத்தி, அதாவது ஆசைகளை அடக்கி, அதன் வெள்ளை நிறம் போல துாய பக்தியுடன் வழிபட்டால் கடவுளை அடையலாம் என இது உணர்த்துகிறது.