ADDED : ஜூன் 21, 2024 02:11 PM

அஷ்டாவக்கிரன் என்பவன் தாயின் கருவில் வளர்ந்த போதே தாத்தா உபதேசித்த வேதங்களை கற்றறிந்தவன்.
மேலும் அவனது தந்தையான கஹோனகர் வேத மந்திரங்களை தவறாக உச்சரிப்பதைக் கேட்டு சகிக்க முடியாமல் கருவிலேயே உடலை முறுக்கிக் கொண்டான்.
இதனால் பிறக்கும் போது முதுகில் கூனும், கை, கால்கள் திரும்பிய நிலையில் இருந்தான். இதனால் எட்டு கோணல் கொண்டவன் என்னும் பொருளில் 'அஷ்ட வக்கிரன்' என அழைக்கப்பட்டான். சிவபெருமானை வழிபட்டு கூன் நிமிர்ந்ததோடு முகப்பொலிவும் பெற்றான். அவன் வழிபட்ட தலம் தஞ்சாவூர் மாவட்டம் கூனஞ்சேரி கைலாசநாதர் கோயிலாகும். சுவாமிமலை - திருவைகாவூர் சாலையில் 4 கி.மீ., துாரத்தில் உள்ளது. இங்கு அஷ்டாவக்கிரனின் உடலில் இருந்த எட்டு கோணல்களை சரியாக்கிய எட்டு லிங்கங்கள் வரிசையாக உள்ளன. மாற்றுத்திறனாளிகள் மனநிம்மதி பெறவும், தன்னம்பிக்கையுடன் வாழவும் இங்கு வழிபடுகின்றனர்.