
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அபிராமி கோயிலில் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் (60, 80ம் கல்யாணம்) நடத்துவது வழக்கம்.
இங்கிருந்து 2 கி.மீ., துாரத்தில் திருக்கடவூர் மயானம் என்னும் தலம் உள்ளது. இங்குள்ள கிணற்றில் இருந்து தான், திருக்கடையூர் சிவனுக்கு அபிஷேகத்திற்கான தீர்த்தம் எடுத்து வருகின்றனர். இதை பங்குனி மாதம் அசுவினி நட்சத்திரத்தன்று மட்டும் பக்தர்கள் தலையில் தெளிக்க அனுமதி தருகின்றனர். மற்ற நாட்களில் கிணற்றை மட்டும் பார்க்கலாம்.